Thursday 5 May 2011

அருணாசலப்பிரதேச முதல்வர் மரணம் சிதைந்த நிலையில் உடல் மீட்பு


இடாநகர், மே 4- அருணாசலப்பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு மற்றும் 4 பேர் பயணித்த பவன் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. விபத்தில் முதல்வர் டோர்ஜி மரணம் அடைந்தார். தேடு தல் குழுவினர் 3 உடல்களையும், ஹெலிகாப் டரின் நொறுங்கிய பாகங்களையும் கண்டுபிடித் தனர்.
அருணாசலப்பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு கடந்த சனிக்கிழமை காலை தவாங் நகரில் இருந்து ஹெலிகாப்டரில் இடாநகருக்கு பயணித்தார். அந்த ஹெலிகாப்டரில் முதல் வரையும் சேர்த்து மொத்தம் 5 பேர் இருந்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடத்தில் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது.
மாயமான ஹெலிகாப்டரை தேடுவதில் தீவிர முனைப்பு காட்டப்பட்டது. இந்திய - திபெத் எல்லை போலீ, மாநில காவல்துறை, ராணுவத்தினர், எஎபி படைப்பிரிவினர் என 3 ஆயிரம் வீரர்கள் மோசமான வானிலையிலும் தீவிரமாகத் தேடினர். பூடான் பகுதியிலும், முதல் வர் சென்ற ஹெலிகாப்டரை தேடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தரைவழி மற்றும் வான் வழியே தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. விமானப்படையின் எம்-17 ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டன.
முதல்வர் சென்ற ஹெலிகாப்டர், பனி மூட்டம் நிறைந்த பகுதியில் விபத்துக்குள்ளாகி இருப்பதை தேடுதல் குழுவினர் புதன்கிழமை கண்டுபிடித்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் பாகங் கள் நொறுங்கி கிடப்பதையும், 3 உடல்கள் கிடப்பதையும் தெரிவித்தனர். அந்த இடத்தில் மீட்புக்குழுவினர் தரை இறங்க முடியாத நிலை இருந்தது. ஹெலிகாப்டர் நொறுங்கியது மற்றும் இறந்தவர்கள் பற்றிய தகவலை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தில்லியில் தெரிவித்தார்.
விபத்துக்கு உள்ளான ஹெலிகாப்டரில் முதல்வர் டோர்ஜி காண்டு, பைலட் கேப்டன் பாபர், கேப்டன் டி.எ.மமிச், காண்டுவின் பாது காப்பு அதிகாரி யெஷி சோடக் மற்றும் தவாங் சட்டமன்ற உறுப்பினர் செவாங் டோன்டுப்பின் சகோதரி லாமு ஆகியோர் இருந்தனர். விபத்து நடந்த இடம் 4900 மீட்டர் உயரத்தில் உள்ளது. அங்கு ராணுவக் குழு அனுப்பப்பட்டு உள்ளது. மோசமான வானிலை காரணமாக வான்வழி தேடுதலில் இடையூறு ஏற்பட்டது.
இதற்கிடையே அருணாசலப்பிரதேச தலை நகர் இடாநகரில், வடகிழக்கு பிராந்திய மேம் பாட்டு துறைக்கான மத்திய அமைச்சர் பி.கே. ஹாண்டிச் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் காண்டுவின் உறவினரும், காண்டு சட் டசபைத் தொகுதி பஞ்சாயத்து தலைவருமான துப்டேன், 56 வயது டோர்ஜி உடலை அடை யாளம் காட்டினார். இதர 4 நபர்கள் உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் கருகி இறந்துள்ளனர். டிவிஷனல் ஆணையர் உடலை பெற்று, முறைப்படியான நடவடிக்கைகள் எடுக் கப்பட்ட பின்னர் டோர்ஜி மரணம் குறித்த அதி காரப்பூர்வ செய்தி வெளியிடப்படும் என்றார்.
காண்டுவின் உடல் தவாங்கில் உள்ள அவரது சொந்தக் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்படு கிறது. இறுதிச் சடங்குகள் தவாங்கிலும், இடா நகரிலும் நடைபெறுகிறது. அரசு மரியாதையு டன் முதல்வரின் இறுதிச் சடங்குகள் நடத்தப் படுகின்றன. முதல்வர் இறந்த செய்தியால் மாநிலத் தலை நகர் இடாநகர் சோகத்தில் மூழ்கியது. காண்டு வின் நிதி விகார் வீடு முன்பாக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். முதல்வர் காண்டு இறந்த தகவலால் ஆத்திரம் அடைந்த சில இளை ஞர்கள் பவன்ஹன் அலுவலகத்தை நொறுக் கினர்.

No comments:

Post a Comment