சின்னச் சின்ன கோபத்தில்
சின்னச் சின்ன வாக்குவாதங்களில்
சின்னச் சின்ன சண்டைகளில்
சின்னச் சின்ன தேடல்களில்
சின்னச் சின்ன ஊடல்களில்
சின்னச் சின்ன மௌனங்களில்
சின்னச் சின்ன பிரிவுகளில்
சின்னச் சின்ன எதிர்பார்ப்புக்களில்
சின்னச் சின்ன எதிர்ப்புகளில்
சின்னச் சின்ன பிடிவாதங்களில்
சின்னச் சின்ன வார்த்தைகளில்
தொலைந்த போது தான்
புரிந்து கொண்டோம் நாம்
நம் உறவுகளின்
மகத்துவத்தையும்
அதன் தனித்துவத்தையும்.
No comments:
Post a Comment