Monday, 18 July 2011

இருளா உன் எதிர்காலம் கண்ணே.......???




















கண்மணி நீ கால் நடந்தால்
என் மனம் வலிக்கும், பிஞ்சுப் பாதம்
மண்ணில் பட நெஞ்சு கனக்கும்
கை வலிக்க, கனம் சுமந்து பூவாய் காத்தேனடா அன்று

மார்பு வற்றி, உதரம் குழைய
கிழிந்து தொங்கும் இதயத்துடன்
எனையே நம்பி சருகாய் மடியிருக்கும் உனக்காய்
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு
இருண்டு போன எதிர்காலத்தோடு இன்று…..

நினைவுகள் பின்னோக்கி நழுவியோட
விழி சுரந்த நீர் ஒட்டிய கன்னமதில்
உருண்டோடி உலர்ந்து போன உன்
உதடு நனைக்கையில் அதை அமிர்தமாய்
எண்ணி உப்பைச் சப்புக் கொட்டும் கண்ணே

எம் மக்கள் வடித்த கண்ணீராலும்,
சிந்திய இரத்தத்தாலும் சூழந்திருக்கும்
இந்த இலங்கை ஒரு தீவு தான்…

No comments:

Post a Comment