Wednesday, 20 July 2011

பூவே


பூ உதிரும் நேரம் - நான்
பூ பறிக்க வந்தேன்
பூ மகளை காணவில்லை
பூமி விட்டு நின்றேன்...

மெல் இதழ்கள் சுவைக்காமல்
மோகனத்தில் விழுந்தேன்...
சொல் இதழ்கள் சுட்டுவிட
சொர்க்கம் விட்டு அழுதேன்...

எந்தமுறை வழிபட்டு
என்னுயிரை இழப்பேன்....
என்றுதினம் காத்திருந்து
என்னுயிரை இழந்தேன்...

வந்த மகள் சென்றவழி
வாசல் சொல்லவில்லை!!
எந்த முகம் பார்த்தாலும்
ஜீவன் அங்கு இல்லை...

எழுதிவைத்த வரிகளில்
உன்னையே தினம் தேடி....
என்ன இது வாழ்க்கை??!!
எப்படியோ போடி.....!! :-((

No comments:

Post a Comment