நீண்ட இரவுப் பொழுதுகள்
உன் நினைவால் உருகி வழிகிறது
விழி வடிக்கும் கண்ணீரில் உன்
பிம்பம் கலைந்திடாமல் இமை மூடி
அடை காக்கிறேன்.
என் கனவுகளில்
நீ எழுதிப் போன அன்பு
காதலாய் இதயம் சென்றிறங்க
என் உயிர் தேடி
அலைகிறேன் உன்னிடம்.
எங்கோ துமிக்கும் மழையின்
சாரலில் நனைந்து வந்த உன் வாசனை
சுவாச வழி சென்று இரத்த நாளங்களுக்கும்
உன் ஸ்பரிசம் உணர்த்தின.
சில்லென்ற குளிர் காற்றை
உன் திசை நோக்கி அனுப்பியுள்ளேன்
அது சுமந்து வரும் எனதன்பைப்
பத்திரமாய்ப் பிரித்தெடுத்துப் புதைத்து கொள் உனக்குள்.
No comments:
Post a Comment