
இன்று அதிகாலை ஓர் அழகிய கனவு,
விழிகள் பிரித்தெழ மனமே இல்லை.
கனவில் நானொரு சின்னக் குழந்தை……,
என்னைச் சுற்றிலும் பல பல பொம்மைகள்,
நடந்தன, தவழ்ந்தன, பாடின, ஆடின….
கண்கள் சிமிட்டி அழகாய்ச் சிரித்தன.
நீராட்டிச் சீராட்டி, உணவூட்டி மகிழ்ந்தேன்,
பிஞ்சுக் கால்களில் வைத்து கதை பேசி
தாலாட்டி மகிழ்ந்தேன்.
மறுபடி என்னைக் குழந்தையாய் மாற்றிய
கனவுப் போர்வை விலக்கி எழுந்தேன்……
எத்தனை பொம்மைகள் என்னைச் சுற்றி,
கைகள் இழந்து, கால்கள் இழந்து
உறவுகள் இழந்து, கண்ணீர் சொரிய - என்
ஈழக் குழந்தைகள் கண் முன் நிஜமாய்..!!!
No comments:
Post a Comment