Tuesday, 1 March 2011

பிரிவுக்கு பின் சந்திப்பு

தினமும் என் பார்வை
சில நிமிடங்கள் அவள் மீது

அவளின் பார்வை
சில நொடிகள் என் மீது

மாற்றங்கள் ஒன்றும் தோன்றவில்லை
என் பார்வையில் அவள் இருக்கும் வரை

மழை பொழியும் நேரத்திலும்
வெப்பத்தை உணர்ந்தேன்
அவளை பார்க்காத பொழுது

அருகில் இருக்கும் பொழுது அதன்
அருமை தெரியாது
யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது

பாலைவனத்தில் மழை போல்
நீண்ட இடைவெளிக்கு பின்
என் பார்வையில் அவள்

வானில் தோன்றும் மின்னல் போல்
என் மனதில் ஒரு மின்னல்

அவள் கூந்தல் அசைவில்
என் இதய துடிப்பு அதிகரித்தது

தினமும் பார்த்த பழகிய
அனைத்தும் அழகாக தோன்றியது

என்னையே புதியதாக
பார்க்குறேன் இன்று

No comments:

Post a Comment