Tuesday, 1 March 2011

பருவ மாற்றம்(ஆண்)

அலையாமல் வந்து போகும்
பருவ கனவு!

கலைந்தாலும் கலையாத
நேற்றைய நிகழ்வு!

பருவம் பொய்க்காமலிருக்க
அரும்புவிட்ட காதல்!

அழகாய் காட்டிப் போகும்
கண்ணாடி பிம்பம்!

தலைக் கோதிஅழகு காணும்
மீசை தடவும்!

கண்டதிற்கும் ஆசைப் படும்
கை நழுவிப் போகும்!

எல்லாமே அழகா என்ன?
கண்கள் அப்படி தான் காட்டுகிறது!

இனிமேல் வேண்டாமென சொல்லும்
காம களைப்பு!

இனிமேலும் பொறுக்கமுடியாது
கையில் ஆறாவது விரல்!

எதை இப்படித் தேடுகிறது
என் இளமை!

திரைப்பட காட்சி பகைத்து கொள்கிறது
அவனாக வேண்டும் நான்!

நானும் விதி விலக்கல்ல
எனக்குள் பருவ மாற்றம்
நிகழ்வதற்குள் நிகழ்ந்து விட்டது..,

அதற்குள் அடுத்ததா?
பருவங்கள்
மாறிக் கொண்டு தான் இருக்கிறது
இனிமேல் கல்லூரி காதல்!

No comments:

Post a Comment