காதலே கை கோர்க்கவா…….!
உன்னோடு உயிர் வாழவா…….!
அன்புக்காய் நான் ஏங்கவா……..!
உன்னையே என் நினைவாக்கவா……..!
*உன்னோடு உயிர் வாழவா…….!
அன்புக்காய் நான் ஏங்கவா……..!
உன்னையே என் நினைவாக்கவா……..!
பட்டாம் பூச்சி போல தான்
உன் நினைவு – என்
நெஞ்சுக்குள்ளே சுத்துகின்றன………!
கண்கள் மூடும் போதும்- உன்
முகம் தானே கண்ணுக்குள்ளே
தெரிகின்றது………………………!
*
என் உள்ளம் கூட
ஏங்குதடா உன் அன்புக்காய்…………!
என் உயிர் கூட துடிக்கின்றது
உன்னோடு வாழ்வதற்காய்……..!
*
காதல் வந்த பின்னாடி
பசி கூட எடுக்கவில்லை
தூக்கம் கூட வரவில்லை
தாய் தந்தை பிடிக்கவில்லை
யார் குரலும் கேட்கவில்லை…………..!
*
உன்னை மட்டும் தேடுதடா
என் உள்ளம் -உன்
நினைவு மட்டும் என்
நெஞ்சில் ஓயாமல் அலை பாயுதே……!
No comments:
Post a Comment