Wednesday, 2 March 2011

டீலா நோ டீலா

 
"டீலா நோ டீலா"
விளையாட்டு நிகழ்ச்சிதானே - என
விளையாட்டாய் பார்க்கலானேன்!


குடிசைக்குள்ளிருந்து ஒரு
கிழவி பேசினாள்!

"அப்பா இல்லை
அம்மா இல்லை!
உழைத்துதான் முன்னேறுவேன்
உறுதியில் என்பேரன்!
போட்டியிலே வெற்றிபெற்று
பெரிதாய் சாதிக்க - என்
பேரனையே வாழ்த்துங்களேன்"

அடப்பாவிகளா
ஆரம்பிச்சிட்டீங்களா - என
ஆத்திரப்படும்நேரம்
அருகிலேகேட்டது
அம்மாவின் விசும்பல்

No comments:

Post a Comment