என் ஆழ்ந்த
மெளனத்திற்குள்
அமிழ்ந்திருக்கின்றன
உன் ஆயிரம்
கேள்விகளுக்கான
பதில்கள்...
உனக்கென
ஒருவார்த்தையேனும்
நான் பதிலாய்க்கூற
எத்தனிக்கையில்
மெளன உலகத்தின்
அத்தனை வார்த்தைகளும்
என்னை வெல்கின்றன...
ஒரு
மெளனப் புன்னகையோடு
முடிகிறது
உனக்கான என் பதில்...
No comments:
Post a Comment