அதிசயம் | இருப்பிடம் | பிம்பம் |
---|---|---|
சிச்சென் இட்சா | யுகட்டான், மெக்சிகோ | |
மீட்பர் கிறிஸ்து | ரியோ டி ஜெனிரோ, பிரேசில் | |
கொலோசியம் | ரோம், இத்தாலி | |
சீனப் பெருஞ்சுவர் | சீனா | |
மாச்சு பிச்சு | குஸ்கோ, பெரு | |
பெட்ரா | ஜோர்டான் | |
தாஜ் மஹால் | ஆக்ரா, இந்தியா | |
பட்டியலில் ஒன்று மதிப்புமிக்கது என்னும் கவுரவ அந்தஸ்தை கொண்டது: கிசா பிரமிடு வளாகம் (உலகின் பழைய அதிசயங்களில் எஞ்சியிருக்கும் இறுதியானது) | கெய்ரோ, எகிப்து |
எதிர்வினைகள்
ஐக்கிய நாடுகள்
2007 ஆம் ஆண்டில், ஐநாவின் மிலினிய மேம்பாட்டு இலக்குகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளுக்கான அங்கீகாரமாக ஐநாவுடன் ஒரு கூட்டுசெயல்பாட்டு ஏற்பாட்டை நியூ7ஒன்டர்ஸ் செய்துகொண்டது.ஐநா கூறியது:
“ | The New7Wonders campaigns aim to contribute to the process of uplifting the well being and mutual respect of citizens around the world, through encouraging interaction, expression of opinion and direct participation by voting and polling on popular themes and global issues which are understandable to everyone. | ” |
UNESCO (யுனெஸ்கோ)
ஐக்கிய நாடுகள் கல்வி,அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு UNESCO (யுனெஸ்கோ), ஜூன் 20, 2007 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், இந்த "தனியார் முன்முயற்சி"யில் தனக்கு தொடர்பு இல்லை என்று மறுபடியும் உறுதிப்படுத்தியது, இந்த கருத்துக்கணிப்பு "இணையத்திற்கு அணுகல் உள்ளவர்களின் கருத்தை மட்டுமே" பிரதிபலிப்பதாக இருப்பதாக அது தெரிவித்தது.செய்திக் குறிப்பு இவ்வாறு முடிந்தது:
“ | There is no comparison between Mr. Weber’s mediatised campaign and the scientific and educational work resulting from the inscription of sites on UNESCO’s World Heritage List. The list of the 7 New Wonders of the World will be the result of a private undertaking, reflecting only the opinions of those with access to the Internet and not the entire world. This initiative cannot, in any significant and sustainable manner, contribute to the preservation of sites elected by this public. | ” |
எகிப்து
எகிப்து வர்ணனையாளர்கள் இதனை உண்மையான பழைய அதிசயங்களில் (Ancient Wonders) உயிர் பிழைத்திருக்கும் ஒன்றே ஒன்றான கிசாவின் பெரும் பிரமிடின் அந்தஸ்துக்கான போட்டியாக பார்த்தனர்."இதனை எகிப்துக்கு, அதன் நாகரீகம் மற்றும் நினைவுச் சின்னங்களுக்கு எதிரான ஒரு சதியாகக் காணலாம்" என்று முன்னணி அரசாங்க நாளிதழ் ஒன்றில் தலையங்க ஆசிரியர் அல் சயீத் அல்-நகார் எழுதினார்.இந்த திட்டம் "அபத்தமானது" என்று கூறிய எகிப்தின் கலாச்சார அமைச்சரான பரூக் ஹோஸ்னி அதனை உருவாக்கிய வெபர், "தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் அக்கறை மட்டுமே கொண்ட" ஒரு மனிதர் என்றார்.உலக பாரம்பரிய தள (World Heritage Site)ங்கள் அமைப்பின் எகிப்திய நிபுணரான நகிப் அமின், "வர்த்தக அம்சம் தவிர, வாக்கெடுப்பில் எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லை" என்பதை சுட்டிக் காட்டினார்.
எகிப்திடம் இருந்தான புகார்களுக்குப் பிறகு, நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை உலகின் 7 பழைய அதிசயங்களில் எஞ்சியிருக்கும் இறுதி ஒன்றான கிசா பிரமிடுகளுக்கு மதிப்பார்ந்த நியூ7ஒன்டர்ஸ் போட்டிச்சின்னம் என்னும் கவுரவத்தை அளித்து, அதனை வாக்கெடுப்பில் இருந்து நீக்கியது.ஆனாலும், கிசாவின் பெரும் பிரமிடு அவர்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளின் இணையத் தளத்தில் இடம் பெற்றிருக்கவில்லை.
பிரேசில்
பிரேசில் நாட்டில் வோட் நோ கிறிஸ்டோ (கிறிஸ்துவுக்கு வாக்களியுங்கள்) என்னும் பரப்புரை நடந்தது, இதற்கு தனியார் நிறுவனங்கள் ஆதரவளித்தன, தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் வாக்களிக்க செய்யும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை. இது தவிர, பான்கோ பிராடஸ்கோ மற்றும் ரெடெ க்ளோபோ உள்ளிட்ட முன்னணி நிறுவன ஆதரவாளர்கள் இந்த சிலை முதல் ஏழு இடத்திற்குள் வாக்களிப்பில் இடம் பிடிப்பதற்கு மில்லியன் கணக்கான டாலர்கள் தொகையை செலவளித்தன
நியூஸ்வீக்கில் வெளியான ஒரு கட்டுரையின் படி, சுமார் 10 மில்லியன் பிரேசில் நாட்டினர் இந்த போட்டியில் ஜூலையின் ஆரம்பம் வரை வாக்களித்திருந்தனர். இது ஒரு மதிப்பீட்டு எண்ணிக்கை தான், ஏனென்றால் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை இந்த பரப்புரை குறித்து இதுபோல் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.
பெரு
பெரு நாட்டின் வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட தீவிரமான பிரச்சாரம் அங்கிருக்கும் ஊடகங்களிலும் அதன் மூலம் பெரு மக்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, பெரு மக்கள்தொகையினர் அநேகம் பேருக்கும் வீட்டில் இணைய இணைப்பு இல்லாதிருந்த போதிலும் அவர்கள் தங்கள் தேசிய அதிசயத்திற்கு பெருமளவில் வாக்களித்தனர்.புதிய உலக அதிசயங்கள் குறித்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியதோடு மாச்சு பிச்சு தேர்வு செய்யப்பட்டது தேசிய அளவில் கொண்டாடப்பட்டது, குறிப்பாக கஸ்கோ பிரதான சதுக்கத்திலும் லிமாவிலும், அங்கு ஜனாதிபதி ஆலன் கார்சியா ஒரு விழா ஏற்பாடு செய்தார்.
சிலி
ஈஸ்டர் தீவு, மோய்க்கான சிலியின் பிரதிநிதி ஆல்பர்டோ ஹோடஸ் கூறும்போது, மோயிஸ் எட்டாவது இடத்தைப் பிடித்திருப்பதாகவும் இதே புதிய ஏழு அதிசயங்களில் மனோரீதியாக இடம் பிடித்தது போலத்தான் என்று அமைப்பாளரான பெர்னார்டு வெபர் அவரிடம் அளித்த ஒரு கடிதம் கூறுவதாகத் தெரிவித்தார். பங்கு பெற்றவர்களில் இத்தகையதொரு ஆறுதல் கடிதம் பெற்றது தாம் மட்டுமே என்று ஹோடஸ் தெரிவித்தார்
ஜோர்டான்
ஜோர்டானின் ராணி ரனியா அல்-அப்துல்லாவும் ஜோர்டானின் தேசிய கருவூலமான பெட்ராவை ஆதரிக்கும் பரப்புரையில் இணைந்து கொண்டார். 7 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்டிருக்கும் நாடாக இருந்தபோதிலும், அந்த நாட்டில் இருந்து 14 மில்லியன் வாக்குகளுக்கும் அதிகமாக பதிவானதாகக் கூறப்படுகிறது. இது ஒரு மதிப்பீட்டு எண்ணிக்கை தான், ஏனென்றால் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை இந்த பரப்புரை குறித்து இதுபோல் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.
இந்தியா
இந்தியாவில் பரப்புரை வேகம் பிடித்து ஜூலை 2007 வாக்கில் உச்சத்தை எட்டியது, செய்திச் சானல்கள், வானொலி நிலையங்கள், மற்றும் பல பிரபலங்கள் என அனைவரும் மக்களை வாக்களிக்க கேட்டுக் கொண்டனர்.
No comments:
Post a Comment