Thursday, 11 August 2011

காதல் எதிரி கவிதைகள்

என் நண்பன் அகமது சுபைர் அவ்வப்போது "காதல் கவிதைகள்" எழுதி குழுமங்களுக்கு அனுப்புவது வழக்கம். அவர் அப்படி கவிதைகள் எழுதி அனுப்பும்போதெல்லாம் அவருக்கு "காதல் எதிரி கவிதைகள்" எழுதி அனுப்புவது நம்ம வழக்கம்.

சுபைரின் காதல் கவிதை

ஒரு மின்னரட்டையில்
என் கவிதை படித்து
கல்லூரியில் காதலித்த
பெண் யாரடா என்ற உன்கேள்விக்கு
எப்படிச் சொல்வேன்?
அது நீதானென்று!

எனது "காதல் எதிரி கவிதை"

மின்னரட்டையில்
என் கவிதைப் படித்து
நீ காதலிக்கும் பெண்
யாரடா என்று கேட்கும்
ஒவ்வொரு பெண்ணிடமும்
சொல்கிறேன்
"அது நீ தானென்று"

No comments:

Post a Comment