Wednesday 3 August 2011

தினம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD90cJfUJqbssZ0l___7Sb0feOJ2Pg95GmgAGBTLfSEg82S8j2WmRElZH05kgd9H25otuYU3eXfPAMPaOR2C1jGx7sJ6W9WUo3-yqvfRS-5fh6If_j5yL8OLRdF5sE03WmwOag8M7EPed_/s400/Grateful.jpg
 
வாழ்த் துடிக்கிறேன்
வீழ்ச்சியிலிருந்து...

தாழத் தவிக்கிறேன்
மீட்சிபெறவே...

வாழும் வீழ்ச்சிக்கு
தாழும் சாட்சி
வாழ்வின் ஆட்சியானது

வாழவோ தாழவொ
வகை தெரியாமல்
காட்சிகள் கைகோத்து
விழாக் கோலம்
காலம் காலமாய்

வெறுமையின் கானங்களில்
வளமையின் நாதம்
அருபட்டுக் கொண்டே இருக்கிறது

விடியலும் தினம்
வந்து கொண்டு தான் இருக்கிறது
ஆனால்...
விடை பெறத் துடிக்கிறது

இதயத்தின் போராட்டத்தில்
விழிகளின் நீரோட்டம்
வடியாமலே வதைக்கிறது

கண்ணின் மணித்துளிகள்
நினைவுகளை நனைத்துக்கொண்டே
வலிகளுக்கு மொழிகளாகிப் போனது

ஏக்கத்தின் எதிரொலியால்
தூக்கங்கள் தழுவாமல்
பரிதவித்துக் கொண்டிருக்கிறது

அன்பின் அகமழைகள்
விழுந்து விரயங்களாய்
அழிந்து கொண்டே இருக்கிறது

சோர்ந்த இதயத்தில்
சோகப் புது மறைகள்
வாதம் வழிகாட்ட
மீதம் தவிப்பாகிப் போனது

விழித் திரையின் வேடத்தால்
இதயத்தில்
வலிகளுக்கு வளைகாப்பு
நடந்து கொண்டுதான் இருக்கிறது

சதிக்கரைகள் மோகத்தால்
உயிர்த்துறையில் சோகங்கள்
வாழ்தலைப் பறிக்கிறது

இது வாழ்தலின் துடிப்பென்றால்
வாழ்தல் எப்போது
இளமையின் வளமை போன பின்பா
முதுமையின் சுமைகளிலா...?

காலத்தே கணிவதெல்லாம்
காலம் கடந்து கணிந்தால்
ஞாலத்தில் வாழ்தலெப்போ...?

பாவத்தின் சம்பளமோ ஈது...
இப்பிறவியில் இல்லை... ஆனால்
முற்பிறவியில் என்றால்
எப்பிறவியில் வாழ்வேன்...?

புரியாத கேள்விகளுக்கு
அறியாத ஆசைகள்
புதிராகிப் போன வாழ்விலே

விளங்காமலே விளக்கங்கள்
வடிகாலாகாமல்
வலி காலாயின
பழி கால்களின் பாசத்தால்

போதனைகளெல்லாம்
வேதனைகளாயின
ஆயினும்
அவர்களால் வேறென்ன
செய்ய முடியும் பாவம்

ஆறுதலும் தேறுதலும்
வாழுதலில் தான்

வாழ முடியாமல்
போக என் செய்ய...
விளங்காமலே...!?

காலம் தன் கடமையில்
கடந்து கொண்டிருக்க
பாவம் என்னை பழிதீர்க்கிறது
பாவம் அதுவும் என் செயும்
காலத்தின் பக்க வாத்தியம் தானே

அனுதாபத்தின் அனுபவங்கள் கூட
முள்ளாகிப் போனது
இரத்த தாகம்
அதற்கும் உண்டோ...!?

இவை இதயத்திலிருந்து
இறக்கி வைக்கப்பட்டவை
மறுபடி ஏற்றிவைக்க அல்ல

இதை இப்படியே விட்டுவிடுங்கள்
மடியட்டும்
அனுதாமும் வேண்டாம்
ஆலோசனையும் வேண்டாம்
ஏனெனில்...
இவை
இறக்கியதை
ஏற்றிவைத்து
உயிர்ப்பித்து விடுகிறது
மீண்டும்

No comments:

Post a Comment