உரிமை
உரிமை இருந்தும் பகிர முடியாமல்
உறவிருந்தும் பேச முடியவில்லை
தேர்வறையில் நாம்
எனக்கான உன் காதல் தெரிந்திருந்தும்
உனக்கான என் காதலை வெளிப்படுத்த முடியவில்லை
மணவறையில் நீ
கதறி அழும் உன் கண்ணீர் தெரிந்தும்
விரல் நீட்டித் துடைக்க முடியவில்லை
பிணவறையில் நான்
No comments:
Post a Comment