உழைக்கும் மக்களின் உயர்வுக்காக தன் வாழ்கையை தியாகம் செய்து வறுமை மற்றும் வசதி ஆகிய இருவேறு பிளவுகளின் பாரதூர சாராம்சத்தினை உழைப்பு ,கூலி ,சுரண்டல் என ஒவ்வொரு படிநிலையாய் சமூக விஞ்ஞான கண்ணோட்டத்துடன் கண்டறிந்து உழைப்பாளி மக்களின் வியர்வைக்கு மதிப்பும் மரியாதையும் சேர்த்தவன் மார்க்ஸ் .
அப்படிப்பட்ட மார்க்ஸ் இன் தனிப்பட்ட வாழ்க்கை பெரும் துயரத்தில் துவங்கி அதிலேயே முடிந்து வலிகளுடனான வாழ்வு என்பது யாவராலும் மறுக்க இயலாது .தன் வாழ் நாட்கள் முழுவதையும் வாசிப்பிலும் ஆராய்ச்சியிலும் செலவிட்ட மார்க்ஸ் பெரும் பொருளாதார பிரச்சினைக்கு தொடர்ந்து ஆளாக நேர்ந்து குடும்ப பொருட்களை எல்லாம் விற்று வாழ வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகநேர்ந்தது .
மார்க்ஸ்க்கு முன் இருந்த அனைத்து தத்துவ அறிஞர்களும் இவ்வுள்கைப்பற்றி விளக்கம் மட்டுமே செய்து வந்தனர் ஆனால் மார்க்ஸ் ஒருவர் மட்டும் தான் சமூக மாற்றத்தை முன் வைத்து அதனை நோக்கிய லட்சிய பாதையில் முதல் மனிதனாய் பயணமானார் .
விரட்டும் வறுமை தொடர்ந்து நாடு கடத்தப்படுதல் நோயால் குழந்தைகளின் மரணம் கடைசிவரை விடாது ஓடிக்கொண்ட வறுமை எனும் கொடும்சுமை என குடும்ப வாழ்வில் மார்க்ஸ் இருந்த போது தொடர்ந்து தன் ஆராய்ச்சியை மேற்கொண்டும் பல்வேறு நாடுகளின் பத்திரிக்கைகளுக்கு தொடர்ந்து கட்டுரைகளையும் எழுதிக்கொண்டு இருந்தார் மார்க்ஸ் ,மார்க்சின் எழுத்துகளில் இது நாள் வரை ஒடுக்கப்பட்டு வந்த உழைக்கும் வர்க்கம் சிந்திக்க துவங்கிய போது ஆளும் அதிகார வர்க்கம் நடுநடுங்கியது தோடு நில்லாமல் மார்க்சை எழுதவிடாமலும் தொடர்ந்து நாடு கடத்தியது .
பாயும் அலையின் வேகத்தை எப்படி குறைக்க முடியாதோ அது போல மார்க்ஸ் எந்த மிரட்டலுக்கும் பொய் பிரச்சாரங்களுக்கும் நாடுகடத்தளுக்கும் அஞ்சாமல் தன் எழுத்து பணியை தொடர்ந்து வந்தார் அதனால் வெகுண்டெழுந்தது உழைப்பாளிகளின் கூட்டம் .
மக்களின் மனம் சிவந்தது ,பாரிஸ் கொம்யுன் பிறந்தது ,இருந்தும் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் வெகு சில நாட்களிலேயே விழ்ந்தது பாரிஸ் கொம்யுன் அதன் படிப்பினைகளை கொண்டு பாட்டாளி வர்கத்தின் சிவப்பு தத்துவம் செழுமை படுத்தப்பட்டது .
இப்படி அரும்பாடு பட்டு வந்த உழைக்கும் வர்கத்தின் ஒப்பட்ற தோழர் மார்க்ஸ் இன் செயலுக்கும் சிந்தனைக்கும் பெரும் பலமாய் இருந்தது ஜென்னி என்ற மனித மாண்புகள் முழுதும் நிறைந்த பாட்டாளி வர்கத்தின் ஒப்பட்ட்ற தோழராக விளங்கினார் ஜென்னி மார்க்ஸ் .
வயதில் தன்னைவிட ஓரிரு வயது குறைவாக இருப்பினும் சிறுவயதிலிருந்தே இருவருக்குமான காதல் பெரும் போராட்டத்தில் பயணித்து இருவரின் தந்தைகளின் இனிய நட்பினால் புரிதலினால் மார்க்ஸ்சுக்காக வெகுகாலம் காத்திருந்து ஒன்று சேர்ந்தது மார்க்ஸ் ஜென்னி காதல் அதனால் தானோ என்னவோ குடும்ப வறுமை பெரும் சுமையாய் இருந்துவந்த போதிலும் எந்த தருணத்திலும் அதை பெரிதாக்காமல் மார்க்ஸ் என்ற கூறிய சிந்தனை குறைந்துவிடாமல் குடும்பத்தையும் மார்க்ஸ்சையும் வளர்த்தெடுத்த ஒப்பற்ற வாழ்க்கை துணைவியாக மட்டுமல்லாமல் மிகச் சிறந்த காதலியாக இறுதிவரை வாழ்ந்தார் ஜென்னி .
மார்க்ஸ் எனும் மாமனிதனின் குடும்பம் வறுமையின் பிடியில் மீளமுடியாமல் சிக்கி தவித்தபோது வேலைக்கு சென்று காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் மார்க்ஸ்சோடு ஒத்தக்கருத்துடைய ராய் இருவரின் சிந்தனையும் எப்போதும் ஒன்றாகவே செயல்பட்டது என்பது இன்னொரு சிறப்பு .
ஜென்னியின் மறைவின் போதும் மார்க்ஸ்சின் மறைவின் போதும் சரி மறைவுக்கு பின்னரும் சரி தத்துவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மார்க்ஸ்சின் குடும்பத்துக்கு பெரிதும் துணை நின்றதோடு நில்லாமல் தன் மறைவுக்கு பிறகு தன் சொத்தையெல்லாம் மார்க்ஸ்சின் மகள்களுக்கு எழுதி வைத்தவர் எங்கெல்ஸ் .
நன்றி
ச.மதுசுதன்
No comments:
Post a Comment