Thursday, 28 April 2011

சமூக விஞ்ஞானி -மார்க்ஸ்



                                                                      யார் இவன்
தலை  கீழாய் கிடந்த
மனித இனத்தை 
அதன் உச்சி முடி பிடித்து 
நேராக நிமிரச்செய்தவன் 

பொதுவுடைமை பேசியபோது 
தாயோடு படுத்துககொள்வாயா
என எதிர்வினை வந்தபோதும்
அதை கடந்து தான் 
இன்று வந்திருக்கிறோம் 
என சவுக்கடி  கொடுத்தவன்

ஒரு மூளையில் செல்வமும் 
சுகபோகங்களும் குவிந்துகொண்டு இருக்க 
இன்னோர்  மூளையில
வறுமையும் பட்டினியும் குவிய 
இன்ன வென்று தெரியாமல் 
மக்கள் திணற 
இது தான் வர்க்க பேதமென 
உபரியின் குவியலென 
மின்னலாய் தன் ஒளியை 
உழைக்கும் இதயங்களுக்குள் பாய்ச்சியவன்....
 
  நன்றி
ச.மதுசுதன்

No comments:

Post a Comment