நன்றி : கூகிள்
ஓர் மாலை....
உன் விழிமொழியை வாங்கியபடியே
பலமையில் கடந்த
என் காதலை,
உன் மொழி சம்மதத்தில் உணர்த்திய
நேரம் அது...
பூட்டி வைத்திருந்த
எந்தன் காதலை,
உன் ஊடல் வழியே
நீ உடைத்தெரிந்து,
உணர்த்திய காலம் அது...
உணர்வுகள் உயிர் தீண்ட,
ஒன்றும் அறியா
எந்தன் நெஞ்சில்,
அலைகடலென கனவுகள் மையல்
கொண்ட காலம் அது...
அர்த்தம் இல்லா
பேச்சில்,
அன்பு மேலிட்ட காலம் அது...
ஒன்றாய் வாழ்வதற்கு
முன்னே....
இப்படித் தான் நம் வாழ்க்கை
என்ற, எண்ணங்கள்
மனக்கூட்டில் சிறுகச்
சிறுகச் வளர்ந்த
காலம் அது....
உன் கரம் பற்றி நடக்கையிலே,
என் உலகமே நீயாய்,
நான் உணர்ந்த காலம் அது...
புற்றீசல் என
வந்து சேர்ந்த
விதி என்னும் வில்லன்,
விரட்டியே,
நாம், நம் காதல் தொலைக்க,
உன் விரல் பற்றிய நான்
வழி தெரியாமல்,
வலியில் இருக்கின்றேன்....
நீ என்னை புரிந்து கொள்ளவில்லை
என்பது உன் நிராகரிப்பில்
நான் அறிந்தேன்...
ஆனாலும்,
என்னை நம்
காதல் புரிந்து கொள்ளும்....
No comments:
Post a Comment