பூக்களை
வாடகைக்கு கேட்கிறாய்
அது புன்னகை சிந்துமென்று
பாவம் அது
சிலநொடிப் பொழுதுகளில்
துவண்டு விழுந்துவிடும்
பூக்களோடு கரைந்து போவதே
புன்னகையை காட்டிலும்
அற்புதமானது
பொழியும் பனித்துளிகள்
பூவிதழ்களில் படிந்துகிடக்கையில் தான் அழகு
உயிரோடத்துடனான
உறவு அங்கே தான்
ஜெனனமெடுக்கிறது
இரவோடு நிலவும்
அதிகாலையில் பணியும்
தனிமையில் மௌனமும்
எவ்வளவு அற்புதமானதோ
அதுவாகவே உன்னோடு நான்
உரிமை கேட்கவில்லை
என்னுனர்வை சொல்கிறேன்
அவ்வளவு தான்
என்னுயிர் கவிதையே
என்னை இன்னும்
காக்க வைப்பது என்ன நியாயம்
இந்நொடியே
என்னை துறந்து
உன்னில் கரைந்து போகிறேன்
மரணத்தின் விளிம்பும்
அமேசான் மழைகாடுகலானது
ஆயிரமாயிரம் நட்சத்திரங்களுடன்
நீயும் நானும்
அங்கே உரையாடிக்கொண்டு இருக்கிறோம்
நீ உதிர்க்கும்
வார்த்தைகளில்
சொக்கிப்போய்
உனது மடியினிலேயே உறங்கிக்போனேன்...
நன்றிhttp://madusudanrajkamal.blogspot.com
No comments:
Post a Comment