Wednesday, 27 April 2011

மே தின நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பதா?

தொழிலாளர்களின் உரிமை தினமான மே 1 அன்று பேரணி, பொதுக்கூட்டம், கொடி யேற்றம் போன்றவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் உட னடியாக தலையிட வேண்டுமென இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையருக்கு சிஐடியு மாநில பொதுச்செயலாளர் அ.சவுந்தரராசன் அனுப்பியுள்ள அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உலகத் தொழிலாளர்களின் உரிமை தினமான மே 1 அன்று தொழிலாளர்கள் தங்களது ஆலை வாயில் முன்பு கொடி தோரணங்கள் கட்டி, கொடி யேற்றும் நிகழ்ச்சி உள்ளிட்ட பன்முக நடவடிக் கைகளில் ஈடுபடுவர். குடியரசு தினம், சுதந்திர தினம் போன்று மத்திய அரசு மேதினத்தையும் பொது விடுமுறை நாளாக ஏற்றுக் கொண் டுள்ளது.

இந்த ஆண்டு மேதினம் கொண்டாடுவதற்கு பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்திக் கொள்ள எங்களது சங்க நிர்வாகிகள் மாவட்ட அளவில் காவல்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர்.

இதற்கு காவல்துறை ஒவ்வொரு மாவட்டத் திலும் ஒவ்வொரு விதமான வழிகாட்டுதலை தெரிவித்துள்ளன.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம், பொதுக்கூட்டங்கள் நடத்த எவ்வித தடையும் இல்லை என்றும், வாக்கு எண்ணும் மையங்கள் உள்ள பகுதியிலிருந்து 1 கி.மீட்டர் தூரத்திற்கு அப்பால் நடத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறி விப்பு குறித்து மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், எங்களுக்கு தேர்தல் ஆணையம் எந்த வழிகாட்டுதலையும் செய்யவில்லை என்று கூறு கின்றனர்.

குறிப்பாக சேலம், புதுக்கோட்டை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் பேரணி, பொதுக்கூட் டத்திற்கு அனுமதி அளிப்பதாகவும், ஆலை வாயி லில் ஏற்றப்படும் கொடி தோரணங்களை ஒருநாள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேதினம் என்பது அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சி அல்ல. தொழிற்சங்கங்கள் நடத் தும் நிகழ்ச்சி என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

மேலும் 2001, 2006ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல் காலங்களில் மேதின நிகழ்ச்சிகளுக்கு எவ்வித தடையோ, அனுமதி மறுப்போ தெரிவிக் கப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 13 அன்றே வாக்குப்பதிவு முடிந்துவிட்டதால் மேதின நிகழ்ச்சியால் தேர்தல் பணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, ஆண்டுதோறும் மேதின நிகழ்ச்சி களை நடத்துவது போல் இந்த ஆண்டும் நடத்து வதற்கான உரிய வழிகாட்டுதல்களை தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

 நன்றி தீக்கதீா்

No comments:

Post a Comment