அழகிய இளைஞன்
பன்முக ஆற்றலுடையவன்
படைப்பாளுமை கொண்டவன்
தீவிர வாசகன்
புத்தகதுடனே பயணித்தவன்
24 வயதில்
தேசத்துக்காக தூக்கு கையிற்றை முத்தமிட்டவன்
இச்சிறு நாட்களே லேயே
ஆங்கிலேய படைகளை
தினறடித்தவன்
முப்பொழுதும் துப்பாக்கியோடு
இருந்தாலும் தீவிரவாதத்தை வெறுத்தவன்
தன் மரணத்தை
தடுத்து நிறுத்த
தந்தை போட்ட கருணை மனுவை கண்டித்தவன்
இந்திய தேசமே
காந்தியம் பேசியபோது
காந்தியத்தின் தவறுகளை
எதிர்த்து வினவியன்
புரட்சின் மறுஉருவம்
பகத்சிங் தான் என
சுபாஸ் சந்திர போசும்
பாராட்ட பெற்றவன்
மார்ச்சியத்தை
கற்றுனர்ந்ததொடு அல்லாமல்
அதை இந்திய சூழலுக்கு
ஏற்ப பொறுத்த முயன்றவன்
மாளிகையில் வைக்கும்
வைரகல்லாய் தான்
சாகசக்காரர்கள் இருக்க முடியும்
ஆனால்
மக்களோடு இணைந்து
போராடுபவர்கள் தான்
கட்டிடத்தின் அஸ்திவாரமாக
இருக்க முடியுமென
தெளிவான ஜனநாயக சோசலிசியம் பேசியவன்
அணையா விளக்காய்
இளைஞர்கள் இதயங்களில்
எரிந்து கொண்டிருந்தாலும்
சோசலிசமே எதிர்காலம்
எதிர்காலம் நம்முடையதே
என பறைசாற்றியவன்
பகத் சிங்
தனிப்பெரும் ஆளுமையாயினும்
அவன் ஒரு குழுவின்
செயல் வடிவம்
பாலுக்கு அழாத குழந்தைகளும்
கல்விக்கு ஏங்காத பிள்ளைகளும்
மழைக்கு ஒழுகாத கூரைகளும்
தான் சுதந்திர இந்தியாவென
தன் குரலை ஓங்கி ஒலித்தவன்
இன்குலாப் ஜிந்தாபாத்
என மரணத்தின் மடியிலும்
வீர முழக்கமிட்டவன்
எங்கள் தோழன் பகத் சிங்...
No comments:
Post a Comment