Tuesday, 19 April 2011

மௌனங்களின் தேவதை . . .




என்னை நீ காதலிக்கிறாயா,
என்று நான் சந்தேகிப்பதில்லை,
சில நேரங்களில்
எப்படியும் அதை
காட்டிக் கொடுத்துவிடுகின்றன
உன் விழிகள் . . . !

என்னை நீ காதலிக்கிறாயா, இல்லையா
என்று நான் சந்தேகிப்பதில்லை,
உன் மௌனங்களை மிக மென்மையாக
படித்துக் கொண்டிருக்கின்றது
என் இதயம்.......!!

என்னை நீ காதலிக்கிறாயா, இல்லையா
என்றெல்லாம் மீண்டும் நான் சந்தேகிப்பதேயில்லை,
சில நேரங்களில்
எப்படியும் அதை மிக அழகாக
காட்டிக் கொடுத்துவிடுகின்றன
உன்னை புரிந்துக்கொள்ளாமலிருக்கும்,
என் மீதான
உன் கோபங்கள் . . . !!!

எப்படியோ......
உன் கோபங்களையும்,
மௌனங்களையும்,
நான் படிப்பதற்கு முன்னே
என்னை விட்டு
தனிமையில் சென்று விடுகிறாய் நீ . . .

கவலைப்படாதே . . . .
மழைச்சாரலில் நீ
நனைந்துக்கொண்டிருக்கும்
வேளையில்,
குடையாய் வருவேன்
அல்லது
துளியாய் தோன்றி
உன் இதயம் தொடுவேன் . . .
~ அவளின் அவன் ~

No comments:

Post a Comment