ஏன் பிறந்தேன் என்று
இது வரை எண்ணியிருந்தேன்,
பூங்கொத்துக்களுடன்
நீ சொன்ன
வாழ்த்துகளால் அர்த்தம் பெற்றுக்கொண்டது
நான் பிறந்த நாள் . . .!!!
நடு இரவினைக் கண்டும்
அஞ்சிடாது வந்து
வாழ்த்துகள் சொன்னாய்.
கவனிக்க மறந்து விட்டேன்.
பூங்கொத்துக்களின் மத்தியில் நின்று என்னிடம் பேசிச் சென்றது
பூஞ்சோலையா,
பூக்களின் தேவதையா ???
~ தேவதையின் காதலன் ♥ ஜெய் ♥ ~
courtesy
http://kavithainila.blogspot.com/
No comments:
Post a Comment