Thursday 28 April 2011

காந்தியவாதத்தின் தோல்வி ...

"சமரசம் என்பது நமக்கு ஒரு படி முனேற்றத்தையும் சிறிது ஓய்வைமட்டுமே  குறிக்கும் மாறாக அடிபணிந்து போவதல்ல "...பகத் சிங் ... 

இந்திய சுதந்திர போராட்டத்தின் தந்தையாக கருதப்படுபவர் காந்தி காங்கிரஸ் இயக்கத்துக்குலேயே பலருக்கும் இவருக்கும் கடுமையான முரண்பாடு இருந்தது .சுபாஷ் சந்திர போசுக்கும் காந்திக்கும் இருந்த முடிவுறா முரண்பாடு உலக புகழ் பெற்றது அது மட்டுமல்ல அவரோடு மிக நெருக்க்கமாக இருந்து வந்த வல்லபாய் படேலுடனும் காந்தியின் கடைசி நாட்களில் முரண்பட்டு இருந்தது தெரிந்த ஒன்று தான் .
தான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் தனது தலைமையில் தான் அனைத்து எதிர்ப் பியக்கங்கள் நடைபெரவேண்டுமென்ற பிடிவாத குணம் இருந்ததாலே யே காங்கிரஸ் இயக்கத்தினுள் முத்திரை குத்தப்படாத சர்வாதிகாரியாக இருந்து வந்தவர் காந்தி ஆனால் அவரால் தான் வெகு மக்களை அணிதிரட்ட முடிந்தது என்பது மறுக்க இயலாத ஒன்று இருந்தும் என்ன பயன் .

உலக அளவில் இந்தியாவின் ஆளுமையாக காந்தி தன்னை ஆக்கி கொண்டதன் விளைவு. தான் மட்டுமே இந்தியாவின் தலைவன் என்று அவராகவே  முடிசூடிகொண்டார் இதன் காரணமாய்தான் இந்தியாவில் தலை சிறந்த ஆளுமைகளாக இருந்து வந்த பகத் சிங் ,அம்பேத்கர் போன்ற அறிவுசுடர்களுடன் பலமான முரண்பாட்டை தானாகவே வளர்த்துக்கொண்டார் .     

அவரோடு இந்தியாவின் ஆளுமைகள் சமரசம் செய்துகொள்ளவேண்டுமென்று எண்ணியவர் அதனை அவர்கள் மறுக்கும் போது உன்னாவிரதமென்ற சப்பை கட்டை ஒவ்வொரு முறையும் கையிலேந்திகொண்டார் இவரின் மீது அக்கறை கொண்டதனாலேயே அவர்கள் சமரசம் செய்து கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர் அப்படித்தான் அம்பேத்கர் காந்தி மோதலும் சமரசமும் நிகழ்ந்தேறியது .

இங்கே வேடிக்கை என்னவென்றால் இந்திய தலைவர்கள் இவரை மீறி செயல்படக்கூடாதென நினைத்து அவர்கள் இவரிடம் விட்டுக்கொடுத்து போக வேண்டும் என நினைத்தவர் .வெள்ளையர்களிடம் பலமுறை சமரசம் செய்துகொண்டார் .ஆம் இந்திய சுதந்திர போராட்டம் ஒவ்வொரு முறையும் வீறு கொண்டு எழுந்த போதெல்லாம் அதை தண்ணீர் கொண்டு அனைத்தவராக காந்தி மட்டுமே இருந்தார் என்பது தான் வரலாற்று கொடுமை .

இளைஞர்களின் ஆதர்சமாய் விளங்கிய பகத் சிங் ஆங்கிலேய பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசி கைதாகி சிறையில் இருந்த போது அப்போது ஏற்பட்ட காந்தி இரவின் ஒப்பந்தத்தில் பகத்சிங் விடுதலை யை  ஒரு கோரிக்கையாக வைத்திருந்தால் இந்திய தேசத்தின் ஆரோக்கிய மான வழித்தடத்தில் பகத்சிங் இந்திய இளைஞர்களை வழி நடத்திக்கொண்டு சென்றிருப்பான் ஆனால் காந்தி பகத்சிங் மீதும் பகத்சிங் ஆளுமையின் மீதும் கொண்ட பொறாமை வெறுப்பின் காரணமாய் எந்த வார்த்தையையும் பேசவில்லை என்பது வரலாற்று உண்மை .   

ஆனால்  இது போன்ற விசயத்தில் சுபாஷ் சந்திர போசும் அம்பேத்கரும் காந்தியை மீறி செயல்பட்டார்கள் என்பது சந்தோசமான செய்தியே .

தான் மட்டுமே இந்தியாவின் அடையாளம் என நினைத்துக்கொண்டு கீழிருந்து எழுந்தவர்களை எல்லாம் செயல்பட விடாமல் செய்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்தவர் தான் காந்தி .

அப்படி  என்றால் காந்தி கெட்டவரா இந்திய தேசத்தின் தந்தை இல்லையா என்ற கேள்வி இங்கே ஏழும், காந்தி என்பவர் தவிர்க்க முடியாத இந்தியாவின் ஆளுமை என்பதில் மாற்று கருத்து இல்லை .ஆனால் உற்று நோக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால் தான் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்ததை மறுத்துவிட முடியாது .

தேச தந்தை என்பதால் அவரின் தவறுகளை மறுப்பதென்பது எந்த வகையிலும் சரியான செயலாகாது ,ஆக காந்தியின் இன்னொரு முகம் சுயநலம் ,பொறாமை ,கொண்டு நிறைக்கப்படது தான்  என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .

இந்திய சுதந்திரம் என்பது காந்தியத்தாலோ அல்லது காங்கிரஸ் இயக்கதாலோ மட்டுமே பெறப்பட்டது அல்ல அது நீண்ட நெடிய வரலாறு ,பலரால் முன்னெடுக்கப்பட்டு அன்றைய ஆளும் சக்திகளால்  நசுக்கப்பட்டது வந்த வழி பாதையில் காந்தியின் காலத்தில் முடிவுக்கு வந்தது அதனால் காந்தியும் காங்கிரசும் தான் காரணம் என்பதை முழு பூசணிக்காயை மறைக்க நினைக்கும் முயற்சி .            

உண்மையில் இந்திய சுதந்திர போராட்டம் என்பது ஆங்கிலேயடிடம் இருந்து துவங்கியது இல்லை இனக்குழு சமூகமாக வாழ்ந்து வந்த காலத்திலே வேற்று இன குழுக்கள் அன்றைய இந்திய எல்லைக்குள் நுழைந்த போதே துவங்கிவிட்டது என்பது வேறு கதை .

சுதந்திர போராட்ட காலத்தில் காங்கிரஸ் மட்டுமல்ல பல்வேறு புரட்சிகர குழுக்கள் செயல் பட்டு வந்ததும் அதன் வரலாறு மறைக்க முடியாது என்பது தெளிவு இவர்கள் உழைப்பினாலும் காங்கிரசின் உழைப்பினாலும் உருபெற்றதே சுதந்திர என்பது தான் உண்மை.
உண்மையில் காந்தியம் ஒரு தத்துவமா அது ஒரு வழிப்பாதை அது பலகட்ட சமரசம் கொண்டது தன்னை பாதுகாத்து கொள்வது என்பது இன்றைய சூழலிலும் மீண்டும் ஒரு முறை நிறுபனமாகி இருக்கிறது  ஊழலுக்கு எதிரான சட்ட மசோதாவை கொண்டு வரவேண்டும் என உண்ணாவிரதம் இருந்தார் அன்ன ஹசாரே ,இத்தனை நாள் எங்கு இருந்தார் என தெரியாத நிலையில் திடீர் என தோன்றியவர்    அன்ன ஹசாரே.விளைவு என்ன குழு அமைக்கப்பட்டது ,முதல் கூட்டம் முடிந்த நிலையில் சட்ட மசோதா கொண்டு வராவிட்டாலும் கவலைப்படமாட்டேன் என சொல்லுகிறார் அதற்க்கு பல காரணங்களையும் விவரிக்கிறார் அன்ன ஹசாரே ஏன் இதற்க்கு முன்பு இந்தியாவில் பாராளுமன்றம் தான் உச்சபட்ச அதிகாரம் படைத்தது என்பது அவருக்கு தெரியாதா அது தெரியாமலா உண்ணாவிரதம் இருந்தார் ?

ஆக காந்தியம் எப்போதுமே தன்னை சமரசத்துக்கு ஆட்படுத்திக் கொள்ளும் என்பது இன்று நிருஊபிக்கப்படுள்ளது .பல வருடங்கள் ஆகியும் காந்தியம் வளர்ச்சியடையவில்லை காரணம் அது விஞ்ஞானப்பூர்வமானது இல்லை என்பது தான் ஆராய வேண்டிய ஒன்று .
காந்தியம் தோல்வியை தான் மீண்டும் தழுவி இருக்கிறது ,இதற்க்கு முன் தெரியப்படாத அன்ன ஹசாரே திடீர்ரென வெளிவந்ததும் காங்கிரஸ் கைகரியம் இருப்பதாகவே சந்தேகப் படதொன்றுகிறது ,காரணம் ஊழலில் இன்று முதலிடம் வகிப்பது மத்தியில் ஆளும் காங்கிரஸ் என்பதால் அதை திசைதிருப்ப இந்த ஏற்பாடுகள் என எண்ண தோன்றுவதில் கொஞ்சம் நியாயமும் இருக்கத்தான் செய்கிறது ...

No comments:

Post a Comment