சே குவாராவை பற்றி சொல்வதற்கும் எழுதுவதற்கும் நிறைய இருக்கிறது ,போதும் போதும் என்றளவுக்கு சொல்லிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கலாம் ,அத்துணை ஆளுமை படைத்தவன் சே .
சே என்ற சொல்லுக்கு இருக்கும் மகத்தான சக்தி மிகவும் வலிமையுடையது .உலகின் எந்த மூலையில் பிறந்த இளைஞனாக இருந்தாலும் சே என்ற சொல் கேட்டாலே ஆகப்பெரிய பரவசமும் பற்றும் பீறிட்டுக்கொண்டு புறப்படும் ஆற்றலுக்கு சொந்தக்காரனாக என்றென்றைக்கும் திகழ்கிறார் .
இளைஞர் முதல் முதியவர்கள் வரை சேவை படித்திவிட்டு மிரட்சியுராத மனித மானுடங்கலே இருக்க முடியாது ,பல்வேறு மொழிகளை கடந்தும் தேச எல்லைகளை கடந்தும் ஏகாதிபத்திய சதிகளை கடந்தும் சே அனைவரையும் சென்றடைந்து இருக்கிறார் .
ஓர் போராளி என்பவனுக்கு போராட்டம் அவனது வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் ஆனால் சேவுக்கு அப்படி இல்லை பிறந்ததில் இருந்து இறப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் சே தனது போராட்டத்தை விடாது நடத்தி கொண்டு இருந்தார் .
குழந்தை பருவத்தில் இருந்து தன்னோடு பிறந்த ஆஸ்துமா நோயோடும் ,கல்விக்கும் ,பருவத்தில் காதலுக்கும் ,பின்பு ஏகாதிபத்திய சதிகளை ஒழித்துக்கட்ட தனது மரணம் வரை தொடர்ந்து அலுக்காமல் போராடியவன் அவ்வப்போது ஆஸ்துமா வாள் துவண்டு வீழ்ந்த பொது புத்தகங்களை கொண்டு இடைவிடாது வாசிப்பின் மூலம் தன்னை உறமேற்றிக்கொண்டவன் சே ,ஆம் நோயுட்ட்று படுக்கையில் இருந்த போதும் சரி தனது இடைவிடாத போராட்ட பயணங்களின் போதும் ஒரு கையில் புத்தகமும் மறு கையில் துப்பாக்கியுடனும் வாழ்ந்தவன் சே .
அர்ஜென்டைனா மண்ணில் பிறந்து தனது ஆஸ்துமா நோயை தொடர்ந்து போராடிக்கொண்டே மருத்துவ படிப்பை முடித்து படிப்புக்கு இடையே சைக்கிள் மூலம் பயணம் மேற்கொண்டு பலதரப்பட்ட அனுபவத்தை தன்னுள் பதிந்து கொண்டவன் .மருத்துவ படிப்பை முடித்து விட்டு தனது புகழ் பெற்ற நெடும் பயணமான மோட்டார் சைக்கிள் பயணத்தை லத்தின் அமெரிக்கா முழுவதும் செய்து தொழிலாளர்களின் அவலத்தையும் பூர்வ குடிகளின் இழிநிலையும் கண்டு வெடித்தெழுந்தவன்.
பின் மெக்சிக்கோ சென்று அங்கு ரால் காஸ்ட்ரோ மூலம் பிடலை சந்தித்து மார்க்ஸ் எங்கெல்ஸ் நட்புக்கு பிறகு அடுத்தபடியாக உலக புகழ் பெற்ற நட்பை உருவாக்கி கொண்டார்கள் சே குவேராவும் பிடல் காஸ்ட்ரோவும் .அதன் வழியாக புரட்சி படையில் இணைந்து கிரான்மா என்னும் சிறிய கப்பலில் கியூபாவை நோக்கி பயணம் அதில் ஏற்பட்ட அனுபவம் கப்பல் கரைக்கு வெகு தொலைவிலே நின்றதனால் எதிர் பாராவிதமாக பாடிஸ்டா அரசாங்கத்தின் வான் வழி தாக்குதல் சிதறிய படை கரும்பு காட்டுக்குள் புகுந்து மலையில் தஞ்சமடைந்து மலை மக்களை புரட்சிக்கு ஆதரவாய் திரட்டியது ,படிப்படியான வெற்றி என கியூபா புரட்சி யின் பெரும் வெற்றி ,அதை தொடர்ந்து தொழிற்துறை அமைச்சராய் நியமன மாகி கியூபா வின் உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சாதனை படைத்து அமெரிக்க நிறுவனங்களை கியூபா மண்ணில் இருந்து விரட்டியது ,கடும் பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா ஏற்படுத்திய போது சோவியத்தின் உதவியால் அதை வீழ்த்தியது என சே குவேரா செய்த சாதனை இப்படித்தான் நீண்டு கொண்டே போகும் .
இங்கே சே குவேராவை தனி நபர் வழிபாட்டுக்கு உட்படுத்துவதாக தோன்றினாலும் ,மிக கடுமையாக தனி நபர் வழிபாட்டை வெறுத்தவர் ,பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் சேகுவேரா தான் பிடல் காஸ்ட்ரோவை மார்க்சிஸ்ட் டாக மாற்றியவர் என்று சொல்கின்றனர்,இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும் இருவருமே மார்ச்சியத்தின் பால் மிகுந்த பற்றுடயவர்கலே அதற்க்கு பெரும் சாட்சியாக விளங்குவது கியூபா புரட்சியே பெரும் எடுத்துகாட்டு ரஷிய புரட்சி ,சீன புரட்சி ,எல்லாவற்றுக்கும் முன்பாக பிரெஞ்சு புரட்சி என அதை அப்படியே கியூபா மண்ணில் அமல்படுத்தாமல் இம்மூன்று புரட்சியை வெகுஜன திரளுடன் சாத்தியமாக்கியவர் இவர்கள் அதனாலே இவர்கள் இருவருமே மார்க்சிய அறிஞர்களாக திகழ்வதில் ஆச்சரியமில்லை.
சேவைபற்றி சொல்லும்போது பிடல் காஸ்ட்ரோ ஓர் சம்பவத்தை நினைவு கூறுகிறார் :-
கியூபா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது எந்த முன் அனுபவமும் இன்றி தொழிற் துறையில் உள்நாட்டு உற்பத்தியில் சாதனை படைத்து கியூபா உள்நாட்டு தேவைக்கேற்ப உள்நாட்டு சந்தையை சாத்தியப்படுதியபோது பத்திரிக்கையாளர்கள் உங்களுக்கு எந்தவித முன் அனுபவமும் இன்றி எப்படி இது சாத்தியமானது ,நீங்கள் படை தளபதியா ,பொருளாதார மேதையா என்று கேட்ட போது சே சிரித்துக்கொண்டே சொன்னாராம் ,IM JUST A MARXIST என்று இதுவே அவரது மார்சிய அறிவுக்கு பெரும் எடுத்துக்காட்டு மட்டுமில்லாமல் தன்னை ஒரு போதும் தனி மனிதனாக முன்னிறுத்திய தில்லை .
ஆனால் இன்று தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது என்ன திருமாவளவன் தன்னை தானே சேரிகளின் சே குவேராவென்றும் சொல்லிக்கொல்வதொடு நில்லாமல், அவரது இயக்கத்தில் அவரை தனிநபர் வழி துதிபாடளையும் அரங்கேற்றி கொண்டு இருக்கிறார் .ஆனால் மேடைகள் தோறும் தனக்கே உரித்தான TRADE MARK அடையாளத்துடன் வீராவேசமாக பேசி இளைஞர்களை உசுபெற்றிவிட்டு சேவின் உண்மை வரலாற்றை அவர்களின் மனங்களின் பதியவிடாமலும் ,கண்களில் காட்டாமலும் சே என்ற பெரும் ஆளுமை யை தவறான முறையில் தலித் இளைஞர்களிடத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.
சே என்ற பெரும் ஆளுமை அர்ஜென்டைனா வில் பிறந்திருந்தாலும் , கியூபாவில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆப்ரிக்காவில் போராடி இருந்தாலும் ,இறுதியாக பொலிவிய மண்ணில் போராடி வீழ்ந்தாலும் சே குவேராவை எந்த ஒரு தனி தேசமும் சொந்தம் கொள்ள முடியாது ,காரணம் சே எந்த எல்லைக்கும் கட்டுபட்டவனில்லை பரந்த மானுட சமூகத்தின் தோழனாக வாழ்ந்து வீழ்ந்தவன் அதன் காரணமாய் தான் உலகின் அத்துணை மூலைகளிலும் சே என்ற சொல்லுக்கு உற்ற தோழர்களாய் நிறைய பேர் இருக்கிறார்கள் ,உருவாகி கொண்டே இருக்கிறார்கள் சேவின் ஆளுமை எவ்வளவு பெரும் முயற்சி செய்து அமெரிக்க மறைக்க முயன்றாலும் இறந்த பின்பும் எல்லைகளை கடந்து தடைகளை உடைத்து சுவாசிக்கும் காற்றாய் உலகம் முழுவதும் நிரம்பி இருக்கிறான் சே.
இன்று உலகின் பல நாடுகளிலும் சே குவேரா புகைப்படம் பதியப்பட்ட TISHIRT கலை அணிந்து கொள்கின்றனர் ஏன் எதற்கு யார் இவர் என்று தெரியாவிட்டாலும் அது அவர்களுக்கு FASHION ஆகப் படு கிறது,ஏன் PASSION ஆகா இருக்க வேண்டிய சே FASHION ஆக மாறினான் அதிலும் ஏகாதிபத்திய சதி ஒளிந்திருக்கிறது ,யாரை எந்த சக்தியை ஒழித்துக்கட்ட தன் வாழ் நாள் முழுவதும் போராடிநானோ அதே ஏகாதிபத்தியம் சே என்ற போராளியையும் வியாபார பொருளாய் மாற்றி பணம் சம்பாதிக்கிறது ,இதைதான் மார்க்ஸ் அன்றே சொன்னார் தனக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும் என்றால் எதையும் செய்ய தயங்காது ,ஏன் தன்னையே விற்கவும் தயங்காது முதலாளித்துவம் என்று அவர் சொன்னது முழுக்க முழுக்க சரியாகத்தான் இருக்கிறது .
உழைத்து பிழைப்பது ஒரு வர்க்கம் அதை சுரண்டி கொழிக்கிறது முதலாளித்துவ வர்க்கம் ,இன்னும் ஒரு படிமேலே போய் தன்னை எதிர்த்தவன் என்று பாராமலும் அவனையே வியாபார பொருளாய் விற்கவும் கொடூர புத்தி உடையது தான் முதலாளித்துவம் தன்னை ஒவ்வொரு சம்பவத்திலும் பதிந்து கொண்டே வருகிறது ,இது திருந்தாது நாம் யோசிப்போம் சமூக மாற்றத்திற்கு மார்க்சிய அரசியலை பயில்வோம் ,விவாதிப்போம் அதை களத்தில் சாத்தியப்படுத்துவோம் ,சிவப் பொன்றே அனைத்திற்குமான தீர்வென்பதை மக்களிடத்தில் கொண்டு செல்லுவோம் ,வெகு ஜனப் புரட்சியை வென்றெடுப்போம் ...
No comments:
Post a Comment