அவள்........
என் வாழ்க்கையில் வந்த நிஜ தேவதை
முகம் காணமலே என் மனதை நேசித்தவள்
சோகங்கள் நிறைந்த என் வாழ்வில் சந்தோஷ தீபம் அவள்
ஒவ்வொரு வினாடியும் அவள் நினைவுகளுடன் நான் .....
என் நினைவுகளுடன் அவள் ..... எதோ ஒரு பந்தம் ...பாசம்
கனவிலும் அவள்முகம் ... ஆனால் நேரில் கண்டதில்லை
கணணி என்னும் அன்னபறவை காதல் தூது சென்றது
உலகின் ஒரு ஓரத்தில் அவள் ....மறு ஓரத்தில் நான்.....
கட்டி தழுவ முடியவில்லை ...அன்பு முத்தமும் பெறுவதில்லை
ஆனாலும் என் காதல் தோற்கவில்லை ....காரணம் உண்மை காதல்
அவளை நான் மணமுடிக்கவும் வாய்ப்பில்லை ...காணவும் வாய்ப்பில்லை
ஆனாலும் சாகும் வரை நான்கொண்ட உயிர் காதல் காற்றுடன் என்னை கலந்திருக்கும்
என் வாழ்க்கையில் வந்த நிஜ தேவதை -அவள்
No comments:
Post a Comment