Friday, 29 April 2011

"அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும்

புதுதில்லி, ஏப்.28: நமது நாட்டில் அறிவியல் கண்டுபிடிக்களை ஊக்குவிக்க வேண்டும்.அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்தவர்கள் இந்தவகையில் பிறருக்கு உதவவேண்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் டி.ராமசாமி வேண்டுகோள்விடுத்துள்ளார்.நாடு முழுவதிலுமிருந்து புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பேருக்கு புதுதில்லியில் வியாழக்கிழமை விருதுகளை வழங்கி பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.பிக்கியை சேர்ந்த ராஜீவ்குமார் வரவேற்றார்.லாக்ஹிட் மார்ட்டின் கார்ப்பரேஷன் நிறுவன முதுநிலை துணை தலைவர் ராய் ஜான்சன், டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிட் பர்பேக், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எச்.கே.மிட்டல் ஆகியோர் பேசினர். இறுதியில் இந்திய மற்றும் அமெரிக்க விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப சங்கத்தைச் சேர்ந்த அவிந்த மித்ரா நன்றி கூறினார்.இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்டத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் (டிஎஸ்டி) அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹிட் மார்ட்டின் நிறுவனம் ஆகியன கூட்டாக அமலாக்கி வருகின்றன.அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்பு செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம் கொண்டது இந்த விருது. இந்திய தொழில் வர்த்தக சங்கம் இந்த விருதுக்கான போட்டியை நடத்தி உரியவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. இந்த விருது பெறுவதற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. இந்த ஆண்டு சுமார் 1000 விண்ணப்பங்கள் வந்தன. அதில் 30 பேர் விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டனர்.சென்னை ஐஐடியில் படித்தவருக்கு விருதுசென்னை ஐஐடியில் படித்த மயங்க் பரீக் விருது பெற்றுள்ளார். விருது பெற்றது பற்றி அவரிடம் விவரம் கேட்டபோது அவர் கூறியது:மூட்டு நோய் காரணமாக சரியாக நடக்க முடியாதவர்களுக்கு உதவும்சாதனம் ஒன்றை கண்டுபிடித்ததற்காக இந்த விருது தரப்பட்டுள்ளது.மூட்டு இறுக்க நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் அவர்கள் சுலபமாக நடக்க இந்த சாதனம் உதவும். சென்னை ஐஐடியில் எம்.டெக் படித்தபோது இந்த சாதனத்தை உருவாக்கினேன். இப்போது ராஜஸ்தானில் தனியாக தொழில் செய்துவருகிறேன். இப்போது விருது கிடைத்துள்ளது. இதனால் ஊக்கம் பெற்றுள்ள நான் இன்னும் பல கண்டுபிடிப்புகள் செய்ய முயற்சிப்பேன்.

No comments:

Post a Comment