Tuesday, 19 April 2011

தூறல்கள் : நிலாச்சாரல்




இரவெல்லாம் விழித்திருந்து
உனக்காக வரிகள் எழுதியும்,
தீருவதில்லை
என் பைபிள் பக்கங்கள் . . . . ஜெய் ♥



நாளெல்லாம் உன்னுடன்
பொழுதுகள் கரைந்தாலும்,
உறக்கம் தொலைத்த
தனிமையின் இரவில் ,
விடியும் வரை
விழிகளில் உன் கனவு . . .



அதிக பணியிலும்,
எனக்காக தான்
வெகு சில நிமிடங்கள்
நேரம் ஒதுக்குகிறேன் என்கிறாய்,
அதெப்படி ??
எனக்களிக்கப்பட்ட அந்நேரங்கள்,
உன்னால் முடிவின்றி
நீட்டிக்கப்பட்டுகொண்டே செல்கின்றன ???!!



விடாத அடை மழையன்று
குடை தேடி
ஒதுங்கிய நேரத்தில்,
அருகே தோள் உரசி நின்றாய்.
யாருமறியா அக்கணத்தில்,
அதிவேகமாய்
உயிருடன் உரசி கடந்திருந்தது
என் காதல் . . .



என்ன அதிசயமாய் இன்று மிட்டாய் ???
காரணம் அறியாமல்
மிட்டாய் கொடுத்துக்கொண்டிருந்த
என்னவளிடம் கேட்டேன்,
சற்றே புன்னகைத்தவாறே
' இன்று சுதந்திர தினம் ' என்றாள்.
முதன்முறையாக என்னிடம் அவள்
பேசிய மகிழ்ச்சியில் ,
கரைய மறுத்து
கற்கண்டாகியிருந்தது
அவள் கொடுத்த மிட்டாய் . . .



தினம் இரவு உறங்கும் முன்
கடவுளை நினைத்துக்கொண்டு படு என்றாள்,
நேற்றிரவு,
அவள் சொன்னது எதுவும் நினைவிலில்லாமல்,
என்னையும் மறந்து உறங்கிவிட்டிருந்தேன்
என்றும் போல் இன்றும்
அவளை நினைத்துக்கொண்டு . .



நடு இரவில் உன் நினைவுகள்
என்னைத் தொட்டு சென்ற பிறகு,
விடியும் வரையில்
உறக்கமின்றி அலைகிறது
என் மனது . . .!!!



பசி உறக்கம் மறுத்துக் கூட
உயிர்வாழ்வேன் என்னுயிரே ,
ஆயுள் முழுதும்
நீ என் அருகிலிருந்தால் !!!!



நீ தொட்ட மாத்திரத்தில்
வெட்கத்தில் சிவந்து போனது
ஆப்பிள் . . .!!!


~ அவளின் அவன் ~ ஜெய் ♥


courtesy
http://kavithainila.blogspot.com/

1 comment: