இதயத்தில் ஒரு இனிய ராகம்
என்னை தாலாட்டும் மாலை நேரம்
மயக்கமாய் ஒரு நிலை வரும் காலம்
என்னுயிரே நெஞ்சிலே உந்தன் ஞாபகம்
மார்கழி பனிக்கலை பொழுதில்
உடலில் படும் சில்லென்ற காற்று
என்தேகம் தழுவி சிலிர்க்கும் பொழுதில்
தேவதையே மனதில் உந்தன் பூமுகம்
உன் கைபிடித்து நடக்க ஆசை குழந்தையாய்
உன் தோள்சாய்ந்து இருக்க ஆசை நண்பனாய்
உன் மார்போடு உறங்க ஆசை உன்னவனாய்
தவமின்றி கேட்கிறன் வரம் கொடு என்னுயிரே
No comments:
Post a Comment